திருவனந்தபுரம்: கேரளாவில் மலையாள தொலைக்காட்சி தொடர் நடிகையாக பிரபலமடைந்த டாக்டர் பிரியா நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் மாரடைப்பால் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மலையாள சின்னத்திரை மற்றும் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான பிரியா திருமணத்திற்கு பின்னர் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். மேலும், திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணிபுரிந்து வந்த 35 வயதான பிரியா. 8 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக இறந்துள்ளார்.
அவரின் மரணம் கேரள திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கடுமையான அதிர்ச்சியையும், வேதனையும் ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே பிரியாவின் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டு தற்போது வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறது. கடந்த 2 தினங்களுக்கு முன் கேரளாவில் சீரியல் நடிகை ரெஞ்சுஷா தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார். அவரின் இந்த திடீர் முடிவு அனைவரின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த சோகம் மறைவதற்குள் நடிகை பிரியா உயிரிழந்து இருப்பது ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.