டெல்லி: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக கோடைகாலம் முடிந்ததும் ஜூன் மாதம் முதல் தேதியில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். ஆனால் முன்கூட்டியே அந்தமான் கடலில் மே 13-ம் தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழையானது படிப்படியாக இந்திய நிலப்பரப்பில் கேரள மாநிலத்தில் 10 நாட்கள் முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தொடங்கியுள்ளது.
நாடு முழுவதிலும் இந்த தென்மேற்கு பருவமழை என்பது ஜுலை முதல் வாரத்தில் பரவக்கூடும். தென் மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து நாடு முழுவதும் கோடை வெப்பத்தில் இருந்து விடிவு பிறக்கும் என்ற தகவலும் உள்ளது. நாட்டின் 80 சதவீத மழைபொழிவு தென்மேற்கு பருவமழை காலத்தில் தான் கிடைக்கும் என்பது குறிப்பிடதக்கது.
அடுத்தபடியாக தென் தமிழ்நாட்டிலும் அடுத்த சில நாட்களில் தென்மேற்கு பருவமழை என்பது துவங்குவதற்கான வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.