சென்னை: கேரளாவில் நிபா வைரஸ் பரவலை அடுத்து தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளுக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடபட்டுள்ளது. நோயுற்ற, அறிகுறி உடைய நோயாளிகளை கையாண்ட பின் 20 நொடிகள் சோப்பால் கை கழுவிய பிறகே சகாதார பணியாளர்கள் இதர பணி மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தபட்டுள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட சுகாதாரத்துறை ஊளியர்கள் பிபிஇ கிட் அணிவதுடன், முகக்கவசம், கையுறை ஆகியவற்றை அணியவும் அறிவுறுத்தபட்டுள்ளனர்.