திருவனந்தபுரம்: கேரளத்தின் கோழிக்கோட்டில் தாய் மற்றும் 3 குழந்தைகளுக்கு நிஃபா வைரஸ் காய்ச்சல் பாதித்திருப்பது சோதனையில் உறுதியானது. அண்மையில் காய்ச்சல் ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து அவரது மனைவி, குழந்தைகளும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவரின் மனைவி மற்றும் குழந்தைகளின் ரத்தத்தை பரிசோதித்ததில், நிஃபா வைரஸால் பாதிக்கப்பட்டது உறுதியானது.