திருவனந்தபுரம்: கேரளாவில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்கிறது. இந்நிலையில் இன்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை தொடரும் என்று திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக தென் மற்றும் மத்திய மாவட்டங்களில் மழை அதிகமாக காணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, இடுக்கி உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இடி, மின்னலும் அதிகமாக காணப்படும் என்பதால் பொதுமக்கள் கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.