Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கேரளத்தில் மகளிர் இலவச பேருந்து பயண திட்ட நிதியிழப்பை சமாளிக்க, டிக்கெட்டின் பின்புறம் விளம்பரங்கள் அச்சிட அரசு முடிவு

கேரளா: கேரளத்தில் மகளிர் இலவச பேருந்து பயண திட்ட நிதியிழப்பை சமாளிக்க, டிக்கெட்டின் பின்புறம் விளம்பரங்கள் அச்சிட அரசு முடிவு செய்துள்ளது. மாதம் ரூ.60 கோடி வரை இலவச பயணத்திற்கு செலவாகும் நிலையில், டிக்கெட் விளம்பரம் உள்ளிட்ட முன்னெடுப்புகள் மூலம் அதனை ஈடுகட்ட திட்டம்.

கேரளாவில் உள்ள காங்கிரஸ் (UDF) தலைமையிலான அரசு, கடந்த ஜூன் 15, 2026 அன்று, பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்காக இந்த இலவச பேருந்து பயணத் திட்டத்தைத் தொடங்கியது. முதற்கட்டமாக, கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் (KSRTC) 3,125 சாதாரண (Ordinary) பேருந்துகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தினால் அரசுக்கு நாளொன்றுக்கு சுமார் ரூ.2 கோடி வரை கூடுதல் செலவினம் மற்றும் வருவாய் இழப்பு ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பிரம்மாண்ட நிதி இழப்பை ஈடுசெய்ய, பயணிகளுக்கு வழங்கப்படும் 'பூஜ்ஜிய கட்டண' (Zero-fare) டிக்கெட்டுகளின் பின்புறத்தைப் பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.டிக்கெட்டுகளின் பின் பக்கத்தில் வணிக நிறுவனங்களின் விளம்பரங்களை அச்சிடுவதன் மூலம், KSRTC-க்கு டிக்கெட் சாரா கூடுதல் வருவாயைப் (Non-ticket revenue) பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

இலவச பயணத்தால் KSRTC-க்கு ஏற்படும் தினசரி ரூ.2 கோடி நிதி இழப்பை இந்த விளம்பர வருவாய் மூலம் ஓரளவிற்கு ஈடுசெய்ய முடியும் என அரசு நம்புகிறது.முன்னணி வணிக நிறுவனங்கள், நுகர்வோர் பொருட்கள் (FMCG) தயாரிப்பாளர்கள் மற்றும் உள்ளூர் வணிகர்களுக்கு இந்த டிக்கெட் விளம்பரங்களில் முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.

இத்திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து KSRTC பேருந்துகளில் பெண்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால், தனியார் பேருந்துகள் கடுமையான வருவாய் இழப்பைச் சந்தித்து தங்களின் சேவைகளை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளன. இத்திட்டத்தால் கடும் நஷ்டமடைந்துள்ள தனியார் பேருந்து உரிமையாளர்கள், தங்களையும் இந்த இலவச பயணத் திட்டத்தில் இணைத்து அரசு மானியம் வழங்க வேண்டும் அல்லது வரியைக் குறைக்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர்.

தனியார் பேருந்து உரிமையாளர்களின் வாழ்வாதாரப் பாதிப்பைக் கண்டறியவும், இத்திட்டத்தின் ஒட்டுமொத்த தாக்கத்தை ஆராயவும் கேரள அரசு ஒரு நிபுணர் குழுவை அமைத்துள்ளது தனியார் பேருந்துகளின் கோரிக்கைகள் மற்றும் இத்திட்டத்தின் நிதி நிலைத்தன்மை குறித்து ஆராய அமைக்கப்பட்ட நிபுணர் குழு, விரைவில் தனது பரிந்துரைகளை அரசிடம் சமர்ப்பிக்க உள்ளது.