திருவனந்தபுரம்: கேரள மாநிலம் காசர்கோடு அருகே செங்களா பகுதியை சேர்ந்தவர் உஸ்மான் (63). கூலித் தொழிலாளி. கடந்த 2021ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமியை ஆட்டோவில் ஏற்றி ஆள் நடமாட்டமில்லாத இடத்திற்கு கொண்டு சென்று பலாத்காரம் செய்தார். இதுகுறித்து காசர்கோடு மகளிர் போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து உஸ்மானை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு காசர்கோடு விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், உஸ்மானுக்கு 167 வருடம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.
கேரளாவில் சிறுமி பலாத்காரம் முதியவருக்கு 167 வருடம் சிறை
0