கேரளாவில் உள்ளாட்சி தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு: காலையிலேயே வரிசையில் நின்று வாக்களித்த சுரேஷ் கோபி
கேரளாவில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. கேரளாவில் மொத்தம் 14 மாவட்டங்கள் உள்ளது. அதில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 1 வாரகாலமாக நடைபெற்ற அனல் பறக்கும் பிரச்சாரத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளாக போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர்.
இந்த நிலையில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவனந்தபுரம் முதல் எர்ணாகுளம் வரை இருக்க கூடிய 7 மாவட்டங்களில் இந்த வாக்குபதிவானது நடைபெறுகிறது. நாளை மறுநாள் திருச்சூரில் இருந்து காசர்கோடு வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இன்று காலை தொடங்கியுள்ள வாக்குப்பதிவில் மக்கள் உள்ளாட்சி பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க வாக்காளர்கள் காலை முதலே வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். நடிகரும், கேரளா பாஜக நிர்வாகியுமான சுரேஷ் கோபி வரிசையில் நின்று வாக்களித்தார்.


