Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கேரளா எல்லையில் 1.25 கிலோ தங்கம் கொள்ளை: நகைக் கடை உரிமையாளர் கார் கேரளாவில் மீட்பு

திருச்சூர்: கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்த ஜெய்சன் ஜேக்கப் (55) என்பவர் கடந்த சனிக்கிழமை சென்னையில் இருந்து 1.25 கிலோ தங்கத்தை வாங்கிக்கொண்டு திருச்சூர் நோக்கி சென்றார். அப்போது தமிழ்நாடு கேரளா எல்லைப்பகுதியில் உள்ள எட்டிமடை பகுதியில் லாரியில் வந்த மர்மகும்பல் ஜெய்சன் ஜேக்கப் காரை வழிமறித்தது. தொடர்ந்து காரின் கண்ணாடியை உடைத்து காருக்குள் ஏரிய மர்ம நபர்கள் காரில் இருந்த தங்கத்துடன் ஜெய்சன் ஜேக்கப் மற்றும் அவருடன் வந்த விஷ்ணு ஆகியோருடன் கேரள எல்லைக்குள் சென்றனர். சிறுது தூரம் சென்றபிறகு ஜெய்சன் ஜேக்கப் மற்றும் விஷ்ணு ஆகியோரை இறக்கிவிட்டுவிட்டு 1.25 கிலோ தங்கம் மற்றும் 2 சவரன் தங்கநகை, 60,000 பணத்துடன் காரில் தப்பி சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக க.க.சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து மாவட்ட காவல்க்கண்காணிப்பாளர் கார்த்திக்கேயன் உத்தரவின் பேரில் 5 தனிப்படைகள் அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர். கோவை கேரளா எல்லைப்பகுதியில் இருக்கூடிய சிசிடிவி கேமரா பதிவுகளை சேகரித்து ஆய்வு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இதன் அடிப்படையில் கடத்தல்காரர்கள் உபயோகித்த லாரி கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும் கேரளாவில் முகாமிட்ட தனிபடைபோலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டிருந்த நிலையில், கேரளா மாநிலம் வழுக்கல் பகுதியில் நடைக்கடை உரிமையாளரின் கார் கண்டுபிடிக்கப்பட்டது. நகைகளை கொள்ளையடித்தவர்கள் வேறு வேறு வாகனங்களில் மாறி அங்கிருந்து தப்பியிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்றூவருகிறது.