திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியம் கேளம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் மற்றும் கணித கண்காட்சி நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் இராஜசேகரன் தலைமை தாங்கினார். கேளம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ராணி எல்லப்பன் கண்காட்சியை திறந்து வைத்து பேசினார்.
இந்நிகழ்ச்சியில், பள்ளி மாணவ, மாணவியர் அறிவியல் மற்றும் கணித பாடங்களில் தங்களின் பல்வேறு கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தி இருந்தனர். இதில், பள்ளி பெற்றோர் – ஆசிரியர் சங்க தலைவர் அமிர்தசேகர், ஊராட்சி மன்ற துணை தலைவர் பாஸ்கரன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் பிரியா, துணை தலைவர் முகமது சுல்தான், கல்வியாளர் க.கோ.பழனி, வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.