புதுடெல்லி: டெல்லியில் கலால் கொள்கை வழக்கில் பிப்ரவரி 26ம் தேதி ஆம் ஆத்மி மூத்த தலைவரான மணிஷ் சிசோடியா கடந்த ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து கடந்த வாரம் திகார் சிறையில் இருந்து அவர் வெளியே வந்தார்.
இந்நிலையில் டெல்லியில் செய்தி ஆசிரியர்களிடையே நடந்த உரையாடலில் ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா கலந்து கொண்டார். அப்போது பேசிய சிசோடியா, கலால் கொள்கை வழக்கு தொடர்பாக கடந்த மார்ச் 21ம் தேதி டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட பின்னர், அவரது மனைவி சுனிதா கட்சியை தாங்கிப்பிடித்தார். அவர் கெஜ்ரிவாலுக்கும் கட்சிக்கும் இடையே பாலமாக செயல்பட்டார்.
டெல்லி, குஜராத் மற்றும் அரியானா மக்களவை தேர்தலுக்கான ஆம் ஆத்மி பிரசாரத்தில் சுனிதா முக்கிய பங்கு வகித்தார். நன்கு படித்த, நன்னடத்தை கொண்டவர். நெருக்கடியான நேரங்களில் கட்சிக்கு அவர் தேவை. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து வந்த பிறகு சுனிதாவின் அரசியல் பயணம் முடிவடையும் என்று நினைக்கிறேன்” என்றார்.