சென்னை: கீழடி அகழாய்வு அறிக்கையை இருட்டடிப்பு செய்ய ஒன்றிய பாஜக அரசு முயற்சிப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். பல்வேறு சதிகளின் மூலமாக தமிழ் மொழியையும், தமிழரின் வரலாற்றையும் இருட்டடிப்பு செய்ய முயல்கின்றனர். இருட்டடிப்பு செய்ய முயலும் பாசிச சக்திகளை முறியடிக்க வேண்டியது தமிழர்களின் கடமை ஆகும். ஆர்.எஸ்.எஸ்., பாஜகவினர் இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளுக்கும். பண்பாட்டுக்கு எதிரானவர்கள் என்றும் தெரிவித்தார்.
கீழடி ஆய்வறிக்கை: ஒன்றிய அரசுக்கு வைகோ கண்டனம்
0