சென்னை: கீழடி வெறும் அறிக்கை வெளியிடும் பிரச்சனை அல்ல; உண்மைக்கும் கயமைக்கும் இடையே நடக்கும் போராட்டம் என சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு முதல் சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழாய்வுப் பணிகளானது நடந்து வருகின்றன. தற்போது 10ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. இதில் கடந்த 2023ம் ஆண்டு, முதல் இரண்டு கட்ட ஆய்வுகளின் அறிக்கையானது ஒன்றிய தொல்லியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தமிழ்நாட்டின் கீழடி ஆய்வு முடிவுகளை ஒன்றிய அரசு அங்கீகரிக்கவில்லை என்றும், போதிய ஆய்வு முடிவுகள் வந்தபோதும் அதனை ஒன்றிய அரசு அங்கீகரிக்க மறுப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், போலி அறிவியலைப் போற்றிடும் நீங்களா அறிவியல் ஆதாரம் பற்றிப் பேசுவது? என சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது;
கீழடி அகழாய்வு அறிக்கை விசயத்தில்
அறிவியல் பூர்வமான ஆதராங்கள் வேண்டும் என்று இப்போது கேட்கும் நீங்கள் , ஏன் இதற்கு முன்பு நீதிமன்றத்திலோ, நாடாளுமன்றத்திலோ இதைச் சொல்லவில்லை ?
போலி அறிவியலைப் போற்றிடும் நீங்களா அறிவியல் ஆதாரம் பற்றிப் பேசுவது ?
இது வெறும் அறிக்கை வெளியிடும் பிரச்சனை அல்ல ; உண்மைக்கும் கயமைக்கும் இடையில் நடக்கும் போராட்டம் . இதில் உண்மையே வெல்லும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.