காவாசாக்கி மோட்டார்ஸ் நிறுவனம், 2024ம் ஆண்டு மாடலாக காவாசாக்கி கேஎல்எக்ஸ்110ஆர் எல் என்ற மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. லைம் கிரீன் வண்ணத்தில் உள்ள இந்த பைக்கில், 112 சிசி 4 ஸ்டிரோக் சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு இன்ஜின் இடம் பெற்றுள்ளது.
கரடு முரடான, மலைப்பாதைகளிலும் எளிதாக செல்லும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. 4 ஸ்பீடு கியர் பாக்ஸ் இடம் பெற்றுள்ளது. ஷோரூம் விலை சுமார் ரூ.3.16 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.