காவாசாக்கி சமீபத்தில் நிஞ்சா இ-1 மற்றும் இசட் இ-1 ஆகிய மோட்டார் சைக்கிள்களை அறிமுகம் செய்திருந்தது. இதன் தொடர்ச்சியாக, நிஞ்சா 7 ஹைபிரிட் மோட்டார் சைக்கிள் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. இந்த பைக்கில் 451 சிசி லிக்விட் கூல்டு பேரரல் டிவின் இன்ஜின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் இடம் பெற்றுள்ளன.
இந்த 2 மோட்டார்களும் இணைந்து 60 எச்பி பவரை வெளிப்படுத்தும். ஸ்போர்ட் ஹைபிரிட், எக்கோ ஹைபிரிட் மற்றும் இவி என 3 ரைடிங் மோட்கள் உள்ளன. இது உலகின் முதலாவது ஸ்டிராங் ஹைபிரிட் மோட்டார் சைக்கிளாக வெளிவருகிறது.