காவாசாக்கி நிறுவனம், இசட் 900 என்ற மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இதில் 948 சிசி 4 சிலிண்டர், லிக்விட் கூல்டு இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 124 எச்பி பவரையும், 97.4 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். மேம்படுத்தப்பட்ட இந்த பைக்கில் புதிதாக 5 அங்குல டிஎப்டி டிஸ்பிளே, நிஞ்சா 1100 எஸ்எக்ஸ்-ல் உள்ளது போன்ற ரிவர்ஸ் கியர், ரைடு பை வயர் தொழில்நுட்பம், பவர் மோட், ரைடிங் மோட்கள், டிராக்ஷன் கண்ட்ரோல் டூயல் சானல் ஏபிஎஸ் உட்பட பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
ஷோரூம் விலை சுமார் ரூ.9.52 லட்சம். ஹோண்டா சிபி650ஆர், டிரையம்ப் ஸ்டிரீட் டிரிபிள் மற்றும் டுகாட்டி மான்ஸ்டர் ஆகியவற்றுக்குப் போட்டியாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.