சுசூகி நிறுவனம் வெர்சைஸ் எக்ஸ் 300 மோட்டார் சைக்கிளை இந்தியச் சந்தையில் மீண்டும் அறிமுகம் செய்துள்ளது. இதில் 296 சிசி பேரரல் டிவின் லிக்விட் கூல்டு இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 40 எச்பி பவரையும், 25.7 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது. நிஞ்சா 300ல் இடம் பெற்றுள்ள இன்ஜின்தான் இது.
முன்புறம் டெலஸ்கோப்பிக் சஸ்பென்ஷன், பின்புறம் மோனோ ஷாக் அப்சர்வர், டிஜிட்டல் அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், எந்த கியரில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளும் வசதி, டூயல் சானல் ஏபிஎஸ் உட்பட பல்வேறு அம்சங்கள் உள்ளன. புதிய வாகன உற்பத்தி விதிகளுக்கு ஏற்ப, பழுது ஏற்பட்டால் எச்சரிக்கும் தொழில்நுட்பம் இடம் பெற்றுள்ளது. ஷோரூம் விலை சுமார் ரூ.3.8 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.