காவாசாக்கி நிறுவனம், வெர்சைஸ் 1100 என்ற ஸ்போர்ட் டூரர் மோட்டார் சைக்கிளை அறிமகம் செய்துள்ளது. இதில் 1100 சிசி இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 133 பிஎச்பி பவரையும், 112.5 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். பெரிய டிஸ்க் பிரேக்குகள், யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் போர்ட் உட்பட பல அம்சங்கள் உள்ளன.
இதைவிட குறைந்த இன்ஜின் திறன் கொண்ட இந்த நிறுவனத்தின் வெர்சைஸ் 1000 மோட்டார் சைக்கிளின் ஷோரூம் விலை சுமார் ரூ.13.91 லட்சம். ஆனால் வெர்சைஸ் 1100 ஷோரூம் விலை சுமார் ரூ.12.9 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.