Friday, July 19, 2024
Home » காவாசாக்கி நிஞ்சா இசட்எக்ஸ்-4 ஆர்ஆர்

காவாசாக்கி நிஞ்சா இசட்எக்ஸ்-4 ஆர்ஆர்

by Lavanya

காவாசாக்கி மோட்டார் நிறுவனம், நிஞ்சா இசட்எக்ஸ்-4 ஆர்ஆர் என்ற மோட்டார் சைக்கிளை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. கடந்த மாதம் இந்த மோட்டார் சைக்கிளின் டீசர் வெளியானது. இதில் 399 சிசி லிக்விட் கூல்டு இன்லைன் 4 சிலிண்டர் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 14,500 ஆர்பிஎம்-ல் 76 பிஎச்பி பவரையும், 13,000 ஆர்பிஎம்-ல் 37.6 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் , குயிக்‌ஷிப்டர் இடம் பெற்றுள்ளது. இந்த பைக் வெளிநாட்டில் உற்பத்தி செய்து இறக்குமதி செய்து சந்தைப்படுத்தப்படுகிறது. முன்புறம் டெலஸ்கோப்பிக் சஸ்பென்ஷன், பின்புறம் மோனாஷாக் அப்சர்வர்கள, 3.4 அங்குல டிஎப்டி கன்சோல், புளூடூத் இணைப்பு வசதி, 4 வித டிரைவிங் மோட்கள், எல்இடி லைட்டுகள் இடம் பெற்றுள்ளன. ஷோரூம் விலை சுமார் ரூ.9.1 லட்சம்.

You may also like

Leave a Comment

2 × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi