காவாசாக்கி நிறுவனம் மேம்படுத்தப்பட்ட நிஞ்சா 300 மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இதில் 294 சிசி பேரரல் டிவின் லிக்விட் கூல்டு இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 40 எச்பி பவரையும், 26.1 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் இடம் பெற்றுள்ளது. தொழில்நுட்ப அம்சங்களில் மாற்றமில்லை என்றாலும், புதிய புரொஜெக்டர் ஹெட்லாம்ப்கள் இதில் பொறுத்தப்பட்டுள்ளன.
இசட்எக்ஸ் 6ஆர் மாடலை அடிப்படையாகக் கொண்டு இது அமைக்கப்பட்டுள்ளதாக நிறுவனத் தரப்பில் கூறப்படுகிறது. புதிதாக மூன்று வண்ணங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விலையில் மாற்றமில்லை. ஷோரூம் விலை சுமார் ரூ.3.43 லட்சம்.