டெல்லி: உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியதை அடுத்து 5 மாதங்களுக்குப் பின் டெல்லி திஹார் சிறையில் இருந்து கவிதா விடுதலை ஆனார். டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கவிதாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது. மதுபான கொள்கை வழக்கில் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட கவிதா, 5 மாதங்களாக சிறையில் இருந்தார். மதுபான கொள்கையால் ஆதாயம் அடையும் நிறுவனத்துக்கும் கவிதாவுக்கும் தொடர்பிருப்பதாக அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.