கடலூர்: கட்டுமன்னார்கோவில் பகுதியில் அமைந்துள்ள வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறைக்கப்படுகிறது. சென்னை குடிநீர் தேவைக்காக ஏரியில் இருந்து விநாடிக்கு 53 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. 47.50 அடி முழு கொள்ளளவு கொண்ட ஏரியின் புதிய மதகு வழியாக 88 கனஅடி நீரும் திறக்கப்படுகிறது. நேற்று ஏரியில் இருந்து விநாடிக்கு 423 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று 141 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.