Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காட்டாங்குளத்தூர் அருகே பைக் மீது கார் மோதி மின் வாரிய ஊழியர் பலி

செங்கல்பட்டு: காட்டாங்குளத்தூர் அருகே சாலையை கடக்கும்போது, இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் மின்வாரிய ஊழியர் பரிதாபமாக பலியானார். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் அருகே வசித்து வந்தவர் விஜய் ஆனந்த் (35). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இவர் ஊரப்பாக்கம் மின் வாரிய அலுவலகத்தில் பணி புரிந்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பணியை முடித்துவிட்டு காட்டாங்குளத்தூர் பகுதியில் இருந்து செங்கல்பட்டு நோக்கி செல்ல சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை தனது இரு சக்கர வாகனத்தில் கடக்க முயன்றுள்ளார்.

அப்போது, சென்னையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற கார், விஜய் ஆனந்த் சென்ற வாகனத்தின் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில், விஜய் ஆனந்த் சம்பவ இடத்திலிருந்து தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக பலியானர். இந்த விபத்து குறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. அதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விபத்தை ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.