மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியை காஷ்மீர் கல்லூரி மாணவிகள் சந்தித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள். இந்த கேள்விகள் அவரது யூடியூப் சேனலில் ஒளிபரப்பப்பட்டன. அதில் எப்போது திருமணம் செய்யப்போகிறீர்கள் என்று ஒரு கேள்வியும் உண்டு. அதற்கு ராகுல்காந்தி, திருமணம் செய்து கொள்ளுமாறு இருபது, முப்பது ஆண்டுகளாக நிர்பந்தத்தை சந்தித்து வருகிறேன் என்று புன்னகையுடன் கூறினார்.