நகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். வடக்கு காஷ்மீரின் உரி செக்டாரில் உள்ள கோஹல்லான் பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்குரிய வகையில் நடமாடிய சிலர் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்பு படை நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். கடந்த 22ம் தேதி இந்த சம்பவம் நடந்த நிலையில் நேற்று ஒரு தீவிரவாதியின் உடலை பாதுகாப்பு படையினர் மீட்டனர். மற்றொரு உடலை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகள் சுட்டு கொலை
80