காசா : இஸ்ரேல் – ஹமாஸ் இடையே 8வது நாளாக நடைபெற்று வரும் பயங்கர போரில் காசா நகரில் இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதல்களில் 447 குழந்தைகள் உயிரிழந்ததாக ஐ.நா தகவல் தெரிவித்துள்ளது. காசாவில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களால் கொடூரமாக கொல்லப்பட்ட மக்கள் பற்றிய விவரத்தை ஐ.நா வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த தாக்குதலில் உயிரிழந்த 1,417 பேரில் 447 குழந்தைகள் மற்றும் 248 பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.