கரூர்: கரூர் மாவட்டம் சவரிமேடு கிராமத்தைச் சேர்ந்த மாணவி தேவிகாவின் உடலை மறு உடற்கூராய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வீடியோ பதிவுடன் மருத்துவ வல்லுநர்கள் அடங்கிய குழு மறு உடற்கூறாய்வு செய்ய ஆணையிட்டுள்ளது. கரூர் சவரிமேடு கிராமத்தைச் சேர்ந்த சிறுமி தேவிகா (16) காணாமல் போன நிலையில் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.