மதுரை : கரூர் ஆட்சியர், கரூர் எஸ்.பி. உள்ளிட்டோர் நாளை ஆஜராகி விளக்கம் அளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் தாக்கல் செய்த மனுவில் ஐகோர்ட் கிளை இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது. கரூர் மாவட்டம் நெரூரில் கோயில் தேரை அனைத்து பகுதிக்கும் கொண்டு செல்ல உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணையின் போது, ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் விழாக்களை நடத்த வேண்டுமா? என்றும் மற்ற சமூகத்தினர் வேடிக்கை பார்க்கவேண்டுமா?; வழிபட அனைவருக்கும் உரிமை உண்டு என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் விழாக்களை நடத்த வேண்டுமா? : நீதிபதி
0