கரூர்: கரூரில் செல்போன் கடை ஒன்றில் அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மற்றும் உதிரி பாகங்கள் எரிந்து நாசம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உரிமையாளர், கடையில் செல்போனுக்கு சார்ஜ் போட்டுவிட்டு கடையை பூட்டி சென்ற நிலையில் மின்சாரம் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது. செல்போன் பேட்டரி வெடித்து, விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடைபெற்று வருகிறது.