Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Leader
search-icon-img
Advertisement

கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

கரூர், பிப். 13: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. எல்பிஎப், சிஐடியூ, ஏஐடியூசி, எச்எம்எஸ், எல்எல்எப் உட்பட பல்வேறு தொழிற்சங்க அமைப்புகள் சார்பில் தொழிலாளர் விரோத நான்கு தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும். விவசாயிகளுக்கு விரோதமான விதைச்சட்டம், மின்சார திருத்த மசோதா ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும்.

அணுசக்தி துறையை தனியார் மயமாக்கும் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்களை வலியுறுத்தியும், ஒன்றிய அரசை கண்டித்தும் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர். அதன்படி, நேற்று காலை கரூர் மனோகரா கார்னர் அருகே 200க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் செய்து, பின்னர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவ்வாறு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 260 பேர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றதால் சிறிது நேரம் இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.