கரூர், ஆக. 28: கரூர் வெங்கமேட்டில் சாலையில் கழிவுநீர் குளம்போல் தேங்கியுள்ளதால் பொதுமக்கள், வாகன ஓ்ட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கரூரில் இருந்து மண்மங்கலம், சேலம் பைபாஸ் சாலை, அரசு காலனி, வாங்கப்பாளையம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் வெங்கமேடு பிரதான சாலை வழியாக சென்று வருகின்றன. இந்த சாலையில் எஸ்பி காலனி பிரிவு அருகே நிழற்குடையை ஒட்டி கடந்த சில நாட்களாக கழிவுநீர் வடிகாலில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் சாலையில் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு, அந்த வழியே செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு, நோய் தடுப்பு நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்