கரூர், நவ. 4: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சில பகுதிகளில் கூடுதலாக மின் விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை ராயனூர் சாலை, திருமாநிலையூர் சாலை, வஉசி தெரு போன்ற பல்வேறு சாலைப் பகுதிகளில் அதிகளவு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த பகுதிகளில் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு இடையே பயணித்து வருகின்றனர். ஏனெனில், இந்த பகுதியில் மின் விளக்கு குறைவு காரணமாக கடும் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த பகுதிகளில் வாகன போக்குவரத்து நலன் கருதி கூடுதலாக மின் விளக்கு வசதி அமைத்து தர வேண்டும் என பல மாதங்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியை பார்வையிட்டு குறிப்பிட்ட சில பகுதிகளில் கூடுதலாக மின் விளக்கு வசதி ஏற்படுத்தி தர தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.