Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Leader
search-icon-img
Advertisement

கலெக்டர் அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்ட கிராம உதவியாளர்கள் கைது

கரூர், பிப். 11: கரூர் கலெக்டர் அலுவலகம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் அசோசியேஷனை சேர்ந்த 18 பேர்களை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அனைத்து தாலுகாவில் பணியாற்றும் தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்களுக்கு டி கிரேடு வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் கலெக்டர் அலுவலகம் அருகே இந்த சங்கத்தின் மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் 10க்கும் மேற்பட்டோர் ஒன்று சேர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்ட 18 பேரை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.