திருவாரூர்: திருத்துறைப்பூண்டி பகுதியில் தண்ணீர் இன்றி நெற்பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டதால் சாகுபடியை தொடரமுடியாமல் விவசாயிகள் டிராக்டர் கொண்டு பயிர்களை அழித்தனர். இந்த ஆண்டு மேட்டூர் ஆணை உரி நேரத்தில் ஜூன் 12ம் தேதி திறக்கப்பட்டதை அடுத்து காவிரி படுகை மாவட்டங்களில் விவசாயிகள் குறுவை சாகுபடியை தொடங்கினர்.
இந்நிலையில் போதிய அளவில் தென்மேற்கு பருவமழை பெய்யாததாலும் தமிழ்நாட்டிற்கு கிடைக்கவேண்டிய காவிரி நீர் கிடைக்காததாலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் பெரும்பாலான இடங்களில் சாகுபடி செய்யப்பட்ட குறுவை நெற்பயிர்கள் கருகி வருகின்றன. இதனை அடுத்து திருவாரூர் மாவட்டம் திருத்துறை பூண்டி அருகே வேளூர் கிராமத்தில் சுமார் 300 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள 70 நாட்கள் வளர்த்த குறுவை பயிர்களை காப்பாற்ற முடியாததால் விவசாயிகள் டிராக்டரை கொண்டு அழித்தனர்.