Saturday, February 24, 2024
Home » சீனா விசா விவகாரத்தில் அமலாக்கத்துறை முன்பு கார்த்தி சிதம்பரம் ஆஜர்

சீனா விசா விவகாரத்தில் அமலாக்கத்துறை முன்பு கார்த்தி சிதம்பரம் ஆஜர்

by Ranjith

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரத்தின் மீது 2022ம் ஆண்டு சிபிஐ வழக்கு பதிவு செய்தது. அதில்,‘‘கடந்த 2010 முதல் 2014ம் ஆண்டு வரையில் பஞ்சாப்பில் இருக்கும் ஒரு மின் உற்பத்தி தொழிற்சாலையில் நடந்த பணிக்காக சட்ட விரோதமாக சீனா நாட்டில் இருந்து 263 பேர் இந்தியாவுக்கு அழைத்து வர சட்டவிரோதமாக விசா வாங்கி கொடுக்க கார்த்தி சிதம்பரம் ரூ.50லட்சம் தொகையை லஞ்சமாக பெற்றுள்ளார் ’’ என தெரிவிக்கப்பட்டது.

பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகு வழக்கை சிபிஐ தரப்பில் முடித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேற்கண்ட விவகாரத்தில் அமலாக்கத்துறை தரப்பில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்காக அனுப்பப்பட்ட சம்மனை அடிப்படையாக கொண்டு கார்த்தி சிதம்பரம் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை இயக்குனரக அலுவலகத்தில் நேற்று காலை நேரில் ஆஜரானார். சுமார் இரண்டு மணி நேரம் நடந்த விசாரணையின் போது கார்த்தி சிதம்பரத்திடம், அமலாக்கத்துறை பல்வேறு கேள்விகளை எழுப்பியதாக தெரியவருகிறது.

You may also like

Leave a Comment

18 + seven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi