திருவண்ணாமலை: கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை கோயிலில் பந்தக்கால் நடும் பணி தொடங்கியது. நவம்பர் 17ல் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கும் நிலையில் பந்தக்கால் பணி நடந்து வருகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் 26ம் தேதி நடைபெறவுள்ளது.