சென்னை: கார்த்திகை தீப ஒளி திருவிழாவையொட்டி பொதுமக்களின் வசதிக்காக திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதுகுறித்து போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலை தீப திருவிழா வரும் 26ம் தேதி நடைபெறுகிறது. 27ம் தேதி பவுர்ணமி தினம். பயணிகளின் வசதிக்காக வரும் 26, 26, 27 ஆகிய 3 நாட்களுக்கும் சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கும், திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கும் ஐம்பது குளிர்சாதன இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகள் இயக்கப்படுகிறது. திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலை சென்று வர சிறப்பு பேருந்துகள் வரும் 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை இயக்கப்பகிறது. www.tnstc.in மற்றும் tnstc mobile app-மூலம் முன்பதிவு செய்யலாம்.