மதுராந்தகம்: கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரி 10வது பட்டமளிப்பு விழாவில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கினார். செங்கல்பட்டு மாவட்டம், படாளம் அருகே உள்ள கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரியின் 10வது பட்டமளிப்பு விழா சரோஜா ரகுபதி கலையரங்கில் நேற்று காலை நடந்தது. இதில், மருத்துவக் கல்லூரிய இயக்குனர் அண்ணாமலை ரகுபதி தலைமை தாங்கினார்.
பொறியியல் கல்லூரி இயக்குனர் மீனாட்சி அண்ணாமலை முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் சுபாளா சுனில் விஷ்வாஷ் ராவ் அனைவரையும் வரவேற்றார்.சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு இளநிலை, மருத்துவம் பயின்று தேர்ச்சி பெற்ற 100 மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழை வழங்கினர். விழாவில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, மருத்துவமனை கண்காணிப்பாளர் கண்ணகி, மருத்துவமனை இயக்குனர் சத்திய நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தினர் உள்ளிட்ட அனைத்து துறை தலைவர்கள், ஆசிரியர்கள் செய்திருந்தனர்.