பெங்களூரு: கர்நாடக அணைகளில் இருந்து காவிரிஆற்றில் உபரிநீர் திறப்பு 2,239 கனஅடியில் இருந்து 2,482கன அடியாக உயர்ந்துள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு 2,182 கனஅடியாக உள்ளது. கபினி அணையிலிருந்து காவிரிஆற்றில் உபரிநீர் வெளியேற்றம் 300 கன அடியாக உள்ளது. கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 100.60 அடி: கபினி அணையின் நீர்மட்டம் 74.61 அடியாகவும் உள்ளது.