கர்நாடக: கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் 10,304 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். அணையிலிருந்து 5,304 கன அடியும், கபினியில் இருந்து 5,000 கன அடி நீரும் வெளியேற்றியுள்ளனர். காவிரியில் நீர் திறக்கக் கோரி பிரதமருக்கு தமிழகம் சார்பில் கடிதம் எழுதப்பட்ட நிலையில், உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து கர்நாடக பகுதிகளுக்கு பாசனத்திற்காக திறக்கப்பட்ட நீர் நிறுத்தப்பட்டுள்ளதும் தமிழகத்திற்க்கு திறக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் இருந்து ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நீர் முழுமையாக வழங்கப்படவில்லை என ஏற்கனவே தமிழக நீர்வள துறை அமைச்சர், மத்திய நீர்வள அமைச்சருக்கு இதுகுறித்து கடிதம் எழுதிருந்தார், இந்த நிலையில் தான் கர்நாடகாவில் பருவமழை குறைவு காரணமாக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை என கர்நாடக தொடர்ந்து தெரிவித்து வந்திருந்தது.
கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக அணையில் ஒரு அளவு நீர் வர அதிகரிக்க தொடங்கியது. அணையில் தற்போது நீர் இருப்பு என்பது கே.ஆர்.எஸ். அணையை பொறுத்தவரை 35 பிஎம்சி நீர் இருப்பு உள்ளது. அதேபோல கபினி அணை அதன் முழு கொள்ளளவு எட்ட இன்னும் இரண்டு அடி மட்டுமே பாக்கியுள்ளது. அணையின் நீர்வரத்து பொறுத்தமட்டில் இரண்டு அணைகளுக்கு மட்டுமே 5,000 கன அடிக்கு மேல் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில் அணையில் இருந்து தற்போது 10,304 கன அடி தண்ணீர் கபினி மற்றும் கே.ஆர்.எஸ். ஆகிய இரண்டு அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 10,304 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகின்றது.