
பெங்களூரு: கர்நாடக பாஜக எம்.எல்.சி. அயனூர் மஞ்சுநாத், தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். பாஜகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக மஞ்சுநாத் அறிவித்துள்ளார். கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாத நிலையில் மஞ்சுநாத் முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.