சென்னை: கர்நாடகா தினமும் 1 டிஎம்சி தண்ணீரை அளிக்க தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்: தமிழக விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முதல்வர் கர்நாடக முதல்வருடன் பேசி, காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவினை நடைமுறைப்படுத்த வேண்டும்.
மதிமுக பொதுச்செயலர் வைகோ: தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி உரிமை நீரை வழங்க முடியாது என்று கர்நாடக முதல்வர் கூறுவது அடாவடித்தனமானது; கண்டனத்துக்குரியது. விசிக தலைவர் திருமாவளவன்: தமிழ்நாட்டில் தண்ணீர் இல்லாமல் நெற்பயிர்கள் காய்ந்து கொண்டிருப்பதைக் கவனத்தில் கொண்டு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பிறப்பித்த உத்தரவின்படி ஜூலை 31ம் தேதி வரை ஒவ்வொரு நாளும் ஒரு டிஎம்சி தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு திறந்து விட வேண்டும்.