சென்னை: 2023-24 பாசன ஆண்டில் கர்நாடகாவில் இருந்து உரிய நீர் பங்கை பெற மேற்கொண்ட நடவடிக்கை குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. உரிய நீர் பங்கை பெற காவிரி நீர் மேலாண்மை ஆணையம், உச்சநீதிமன்றத்தில் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து விளக்கம் அளித்துள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 21, 22, 23-வது கூட்டங்கள் ஜூன் 26, ஆகஸ்ட் 28, 29 ஆகிய நாட்களில் நடைபெற்றது.