சென்னை: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடகம் தண்ணீரை தந்து கொண்டிருக்கிறது என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பையே கடைசி தீர்ப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டுக்கு 15 நாட்கள் வினாடிக்கு 5,000 கனஅடி நீர் திறக்க வேண்டும் என்பது நாளையுடன் நிறைவடைய உள்ளது. காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு பின்பற்றப்பட வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.