சென்னை: உச்சநீதிமன்ற தீர்ப்பை கர்நாடகா மதிக்கவில்லை; கர்நாடகாவின் போக்கு ஜனநாயகத்துக்கு நல்லதல்ல என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். நாளொன்றுக்கு 13,500 கன அடி நீர் திறக்க கோரினோம்; ஆனால் அவர்கள் 2,600 கனஅடி நீர் தான் திறக்கின்றனர். உச்சநீதிமன்ற உத்தரவுப்படியே இந்த நாட்டில் உள்ளவர்கள் நடக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.