கர்நாடகா: கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பதாகைகள் ஏந்தி பேரணியில் ஈடுபட்டுள்ளனர். ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பாரபட்சமாக செயல்படுவதாக ஆளும் காங்கிரஸ் அரசு குற்றச்சாட்டு வைத்துள்ளது. கர்நாடக காங்கிரஸ் தலைவரும் துணை முதல்வருமான டி.கே.சிவகுமார் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் பேரணியில் பங்கேற்றுள்ளனர்.