கர்நாடகா: கர்நாடக அணைகளிலிருந்து காவிரிஆற்றில் உபரிநீர் திறப்பு 818 கனஅடியில் இருந்து 820 கனஅடியாக உயர்ந்துள்ளது. கேஆர்எஸ் அணையில் இருந்து காவிரி ஆற்றில் 520 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கபினி அணையிலிருந்து காவிரிஆற்றில் உபரிநீர் வெளியேற்றம் 300 கன அடியாக தொடர்ந்து நீடிக்கிறது. கே.ஆர்.எஸ். அணை நீர்மட்டம் மீண்டும் 100 அடியை கடந்த நிலையில் கபினி அணை நீர்மட்டம் 74.74 அடியாக உள்ளது.