பெங்களூரு: கர்நாடக மாநிலம் மண்டியா காங்கிரஸ் எம்எல்ஏ ரவிகுமார் கவுடா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஒன்றிய பாஜ அரசு ஒன்றிய அமைச்சர்கள் குமாரசாமி, ஷோபா கராந்தலஜே, பிரகலாத்ஜோஷி, தேசிய பொது செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆகியோர் கொண்ட குழு அமைத்து கர்நாடகாவில் ஆபரேஷன் தாமரையை செயல்படுத்த திட்டமிட்டு வருகிறது.
கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க இவர்கள் சதி செய்து வருகிறார்கள். இதற்கு முன்பு காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாஜ பக்கம் இழுக்க தலா ரூ.50 கோடி பேரம் பேசினார்கள். தற்போது எனக்கு ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஒவ்வொரு எம்எல்ஏவுக்கும் ரூ.100 கோடி தருகிறோம். 50 எம்எல்ஏக்கள் தேவைப்படுகிறார்கள் என்று கூறுகிறார். பாஜ புரோக்கர்களின் வேலை இங்கு பலிக்காது. இந்த கூட்டத்தை தகுந்த ஆதாரத்துடன் பிடித்து அமலாக்கத்துறை, சிபிஐ வசம் ஒப்படைப்பேன். அவர்கள் பேசிய ஆடியோ என்னிடம் உள்ளது ’ என்றார்.