கர்நாடகா: கர்நாடகாவில் மணகுலியில் உள்ள கனரா வங்கியில் ரூ.53.26 கோடி மதிப்புள்ள 59 கிலோ தங்கம் கொள்ளை அடித்து சென்றுள்ளனர். மே 23 முதல் 25ம் தேதி வரை வங்கிகளுக்கு விடுமுறை நாளாக இருந்தபோது தங்கம் கொள்ளை அடிக்கப்பட்டது. கர்நாடகாவில் கனரா வங்கியில் நடந்த கொள்ளைச் சம்பவம் குறித்து மே 25ம் தேதிதான் தெரிய வந்துள்ளது. சிசிடிவி, என்.வி.ஆர். யூனிட், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவற்றை செயலிழக்கச் செய்துவிட்டு கொள்ளை அடித்தனர். கொள்ளையர்களை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. போலீசை திசை திருப்ப வங்கிக்குள் பில்லி சூனியம் செய்தது போல கருப்பு பொம்மைகளை வைத்து கொள்ளையர்கள் சென்றுள்ளனர்.
கர்நாடகாவில் கனரா வங்கி கொள்ளையர்களை கண்டறிய முடியாமல் கர்நாடக போலீஸ் திணறல்
0