சென்னை: புரட்சியாளர் காரல் மார்க்ஸ் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி கூறிய கருத்துக்கு எனது வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மதம் மனிதனுக்கு அபின் என்று கூறினார் மாமேதை காரல் மார்க்ஸ், காரல் மார்க்ஸ் கூறியதை பொறுத்துக் கொள்ள முடியாமல் அவரை தொடர்ந்து விமர்சனம் செய்கிறாரா ஆளுநர்? என செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.